அடையாறில் கொலை செய்யப்பட்ட பீகாரைச் சேர்ந்த குடும்பம்: பீகாரைச் சேர்ந்தவர்கள் 5 பேர் கைது.. வெறுப்பைப் பரப்பாதீர் !

பரவும் செய்தி

சென்னையில் பீகாரைச் சேர்ந்த கௌரவ்குமார் மற்றும் அவரது மனைவி குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன ?

பீகார் மாநிலத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்த கௌரவ்குமார் மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்ததாக ஆதாரமற்ற வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இருமாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும்படி செய்திகளைப் பகிர்வது குற்றம்.

வெறுப்பைப் பரப்பாதீர் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *